Wednesday, 13 June 2012
லிகாய் செய்திகள்:12-06-12:மாலை சென்னை 1.கோட்ட கமிட்டிக்கூட்டம் & மாநில மையக்கூட்டம். சென்னை . 15-06-12 தஞ்சை கோட்டக்கூட்டம்,தஞ்சை. 16-06-12,காலை மதுரை கோட்ட நிர்வாகிகள் கூட்டம்,மாலை மாநில நிர்வாகிகள்,அகில இந்திய செயற்குழுவின் தமிழ்நாடு உறுப்பினர்கள் கூட்டம்.மதுரை.
15-07-12.அகில இந்திய நிர்வாகிகள் கூட்டம்.ஆழப்புழை,கேரளம்.
அனைத்துக்கிளைகளும,எல்.ஐ.சி முகவர்கள் பிரச்சனைகளை எழுதி மாநில மையத்திற்கு அனுப்பிவைக்கவும்.நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதித்து எல்.ஐ.சி.நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
எழுத்தாளர் சோலை:
அன்மையில் மறைந்த எழுத்தாளர் சோலை அவர்கள்.ஒரு சிறந்த ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்.பன்னாட்டு மூலதன வரவை எதிர்த்து பல பத்திரிக்கைகளிலும் ஆணித்தரமான கட்டுரைகளை எழுதியவர்.குறிப்பாக எல்.ஐ.சி.யில்.தேவையற்ற அந்நிய முதலீட்டை எதிர்த்தவர்.
அவருடன் எழுபதுகளில் நெருங்கிப்பழகும் வாய்ப்புக்கிடைத்தது.அப்போது அண்ணன் இனியன் கவிதா பதிப்பகம் நடத்தி வந்தார்.அத்தான் கந்தர்வன் தலைமைச்செயலகத்தில் பணி புரிந்தார்.நான் கிண்டியில் வேலை செய்தேன்.தேவகோட்டை கார்க்கியும்,சோலையும் எம்.ஜி.ஆருடன் மிகவும் நெருக்கமாகப்பழகி பல அரசியல் ஆலோசணைகளை வழங்கி வந்தனர். அந்தச்சமயம்,சோலை அவர்கள் சோவியத்திற்கு சென்று வந்ததார்.வந்ததும் அவரது பயண அனுபவங்களை தொகுத்து “புதிய வானம்,புதிய பூமி” என்ற தலைப்பில் கவிதா பதிப்பகம் சார்பாக புத்தகம் வெளியிடப்பட்டது.வெளியீட்டு விழாவை சோவியத் கலாச்சார மையத்தில் நடத்தினோம்.அதில்தான் எம்.ஜி.ஆர்.கலந்துகொண்டு ”அண்ணாயிசத்துக்கு” விளக்கம்?அளித்தார். வேலூர்.ஜி.விஸ்வநாதன்.எம்.பி.தோழர் மைதிலி சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் மறுநாள் பத்திரிக்கைகளில் பிரதானமாக வெளி வந்தது.எம்.ஜி.ஆரை,தி.மு.க.விலிருந்து வெளியேற்றிய நேரம்.புகைப்படத்தில் எம்ஜிஆருக்குப்பின்னால் நாங்கள் எல்லாம் இருந்தோம்.அந்த புகைப்படத்தை ஆதாரமாகவைத்து கந்தர்வனுக்கு,கருணாநிதி அரசு ஒரு அரசு ஊழியர் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.இது அரசியல் நிகழ்ச்சி அல்ல கலாச்சார நிகழ்ச்சி,அதுவும் எனது மாப்பிள்ளையின் பதிப்பக நிகழ்ச்சி என்று விளக்கம் கொடுத்தும்,கலந்து கொண்டது தவறு என கந்தர்வனை சஸ்பெண்ட் செய்தது அரசு.மறக்கமுடியாத சம்பவம்.

Subscribe to:
Posts (Atom)